சித்தார்த்தா – புத்தகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே நூறு வருடங்களுக்கு முன்பு எழுதியது. அறிமுகம் தேவை இல்லாத புத்தகம். படிக்கும் முன் ஆசிரியரை பற்றி அறியும் ஆவல். இது ஒரு வித சந்தேக புத்தியோ என்று கூட தோன்றுகிறது. தராசிட என்னக்கு என்ன தெரியும் என்றும் தோன்றும். இருந்தும் பார்த்ததில், ஹெஸ்ஸேவின் வாழ்வும் தேடலும் பல இடங்களுக்கும் பல கோணங்களுக்கும் சென்றுள்ளது. பௌத்தம், இந்திய அறிமுகம் அதில் ஒரு சில வருடங்கள். தேடலை பிரதானமாக கொண்ட கதை. புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த … Continue reading சித்தார்த்தா – புத்தகம்

நிற்க!

சில சமயங்களில் ஏதாவது ஒன்று நம்மை நிறுத்தி வைக்க பார்க்கிறது. நம் எண்ண ஓட்டத்தை, தினசரி ஓடிக்கொண்டிருக்கும் துடிப்பை, படித்துக்கொண்டிருக்கும் விஷயங்களை, வேலையை, உணவை. இப்படி எல்லா விஷயங்களையும் நின்று யோசிக்க வைக்கும். போய்க்கொண்டிருக்கும் பாதையை கேள்வி எழுப்பும். மாற்று கருத்துக்களை உள்புகுத்தும். பல புதிய பாதைகளை காட்டி தள்ளப்பார்க்கும். என்றோ கிடப்பில் போட்ட விஷயங்களை தேவையானது போல் கொண்டு வரும். நேற்று வரை தீர்மானமாய் இருந்த கருத்துக்களை தடுமாற்றம் கொள்ள செய்யும். வருங்காலத்தை மாற்றி யோசிக்க … Continue reading நிற்க!

ஓநாய் குலச்சின்னம் – புத்தகம்

Wolf Totem என்ற சீன மொழியில் எழுதப்பட்ட நாவலின் மொழிபெயர்ப்பு. சி.மோகன் அவர்களால் மொழிபெயர்க்க பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்று எங்குமே உணரவில்லை. இது மங்கோலிய நிலத்தில் நாடோடி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த மேய்ப்பர்களின் கதை. அதில் வாழும் ஓநாய்கள் கதையின் நாயகர்கள். ஓநாய்களை தெய்வத்தின் படைப்பாகவும் மேய்ச்சல் நிலத்தின் நண்பனாகவும் நம்பும் மேய்ப்பர்கள். மங்கோலியா புல்வெளி பிரதேசம். வருடத்தில் பாதி குளிர் காலமாகவும், சிறிய கோடை காலமும் இளவேனிற்காலமும் கொண்ட பிரதேசம். மரங்கள் இல்லாத புல்வெளி. மேய்ச்சல் நிலம். … Continue reading ஓநாய் குலச்சின்னம் – புத்தகம்

ஜெய்ப்பூர்

ரண்தம்போரில் இருந்து ஜெய்ப்பூர் ரயிலில் பயணித்தோம். அது மும்பையில் இருந்து ஹரியானா செல்லும் தொலைதூர வண்டி. எங்கள் பெட்டியில் ஒரு மும்பை குடும்பம் இரு குழந்தைகளுடனும், ராஜஸ்தான் தந்தை மகளும் பயணித்தனர். கூடவே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெரியவரும் உடன் பயணித்தார். பொதுவான மொழி பேசாத போதும் பேச்சு வார்த்தை சுவாரஸ்யமாக போனது. ராஜஸ்தான் தந்தை கம்பீரமாக கோட் அணிந்து துளியும் தயக்கமில்லாமல் அவரது மொழியில் பேசினார். அதுவே அதிகம் புரிய வைத்தது. மாநிலத்தில் இரண்டு இடங்களில் … Continue reading ஜெய்ப்பூர்

ரண்தம்போர் தேசிய பூங்கா

பரத்பூரில் ராஜஸ்தானின் எல்லையில் உள்ள ஊர். ஆக்ராவில் இருந்து 50 கீ.மீ தூரம். அங்கிருந்து ரயிலில் சவாய் மாதோபூர் வந்து சேர்ந்தோம். இரண்டு மணிநேர பயணம். வழி நெடுக கடுகு வயல்களே நிறைந்திருந்தன. தாளிப்பை தவிர வேறெங்கும் கடுகு பயன்படுத்திராத நம்மக்கு, இவ்வளவு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ராஜஸ்தான் தான் கடுகு உற்பத்தியில் முதலிடம் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புலியின் படங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகள் எங்கும். ரண்தம்போர் … Continue reading ரண்தம்போர் தேசிய பூங்கா

ஆக்ராவில் ஒரு நாள்

ஒரு வார பயணமாக ஆக்ரா, ரண்தம்போர், ஜெய்ப்பூர் சென்றிருந்தோம். இதுவே வட இந்தியாவிற்கு முதல் பயணம். டெல்லி சென்று அங்கிருந்து ரயிலில் ஆக்ரா செல்வதாக திட்டம். ஜனதிரள்களுக்கு நடுவில் ஊடுருவி ரயிலில் வந்தமர்ந்தோம். தொலை தூரப்பயணம் செல்வதற்கு முன்னுள்ள ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த பதட்டம் வீட்டை விட்டு கிளம்பியதும் காணாமல் போய் விடுகிறது. வடஇந்திய பிம்பமும் அப்படித்தான். ரயில் ஏறியதும், மொழி தெறியாத போதும் அகன்று விடுகிறது. ரயில் கிளம்பியதும் சிறிது தூரம் போனால் பசுமை … Continue reading ஆக்ராவில் ஒரு நாள்

மழைக்காலம்!

ஒவ்வொரு வருடமும் நினைவுகளை விட்டு செல்லாமல் போவதில்லை. டிசம்பர் முதல் பாதி ஏதாவது வரும். இப்படித்தான் நம்பிக்கைகள் உருவாவதோ! கடந்த 6 அல்லது 7 வருடங்களாக பருவ மழையோ அல்லது ஏதாவது ஓர் பெரிய நிகழ்வோ நகரத்தை உலுக்கி விட்டுத்தான் போகிறது. கொரோனாவிற்கு பின் இதுவே வீடடங்க வேண்டிய நாட்கள். நகரத்தை அமைதி ஆக்கி இருட்டாக்கி, வெளியே இருட்டுதான் உள்ளே பார் என்று நினைவுறுத்தும். ஓட்டம் குறைய, உணவை குறைக்காமல் போகும் போது கேள்வியை எழுப்பும். பிற … Continue reading மழைக்காலம்!

அவள் !

அசோகமித்திரனின் 'இன்று'ம், கற்பது கேட்பது கருதுவது பொய் என்றும் மனதிற்குள் ஒரு சஞ்சலம். இதில் 'அவன்' என்ற எழுத்து நடை ஏற்படுத்திய தாக்கம். இங்கு ஒரு அவள். சில மாதங்களாகத்தான் எனக்கு அவள் பரிச்சியம். ஒவ்வொரு நாளும் மதிப்பை ஏற்றி கொள்கிறாள். இது அவளின் கதை. அவளின் மகளுக்கு கல்யாணம். மனதிற்கேற்ற குடும்பம் அமைந்துள்ளது. மகளுக்கு பிடித்த மணவாளன். திரும்பிப் பார்க்கிறாள். ஒன்பது மாத குழந்தையை கையில் கொண்டு ஆரம்பித்த வாழ்க்கை. வேலைக்கு போகாத கணவனை வைத்து … Continue reading அவள் !

இலக்கிய வாசிப்பு

சில வாரங்களுக்கு முன் பங்கேற்ற வாசிப்பு முகாம் பல கோணங்களில் சிந்திக்க தூண்டியது. படிக்கும் நூல்கள், படிக்கும் வடிவம் (சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை), மரபு இலக்கியமா அல்லது நவீனமா, தமிழா ஆங்கிலமா. பல கேள்விகள், சில தெளிவுகள். இலக்கிய வாசிப்பு ஏன் தேவை என்ற கேள்வி மற்றனைத்தையும் விட பெரியது. நேற்று வரை வாசித்ததில் இலக்கியம் இல்லை. இலக்கியத்தை தேடி படிக்க வில்லை. கதைகள் இளவயதை கற்பனைக்குள் கொண்டு சென்றது. அந்த உலகம் அடுத்து என்ன … Continue reading இலக்கிய வாசிப்பு