ரப்பர் – புத்தகம்

கதை முன்பின் மாறி ஒரு குடும்பத்தின் 3 தலைமுறைகளின் வாழ்க்கையை சுற்றுகிறது. பட்டினியில், நோயின் கொடுமையில் உழலும் குடும்பம். அதில் இருந்து பிழைப்பு தேடி இன்னொரு நோய்வாய் பட்ட குடும்பத்துடன் சேரும் சிறுவன். அவன் அங்கு சேர எதுவும் காரணமாய் இருக்கவில்லை, இருந்தாலும் ஒரு தாய் என்றொரு உருவம் தேவை பட்டது போலும். பசியில் அதன் இயல்பான குரோதத்தில் பாவங்கள் செய்கிறான். அங்கிருந்து வெறிபிடித்து வாழ போராடுகிறான். காட்டை வாங்கி ரப்பர் தோட்டமாக்கி பெருவட்டன் ஆகிறான்.உழைப்பே பிரதானமாக … Continue reading ரப்பர் – புத்தகம்

The Voice

There is this voice inside. It keeps talking all the time. It doesn't have day or night i think. It talks to the exterior self while the body is awake and keeps pestering the sub conscious at sleep. It let the exterior self to do what it likes or when it does not care. It … Continue reading The Voice

விஷ்ணுபுரம் – புத்தகம்

ஜெமோவின் இந்த புத்தகம் படிக்க இது சரியான நேரம் என்று தோன்றியது. இதன் அனுபவம் இந்த சூழ்நிலையில் இன்று உள்ள என் அனுபவத்தை இன்னொன்றாக மாற்றும் என்ற நம்பிக்கையோடு. கடந்து, தெளிந்து செல்ல!. கதையில் இருக்கும் பிரமாண்டம் உள்ளே செல்ல சிறிது தடையாக உள்ளது. அந்த வர்ணனை கற்பனைக்கு எட்டாதாக கூட உள்ளது. இருந்த போதும் ஒரு பிம்பம் கொடுத்து நம்மில் அந்த பிரமாண்ட உணர்வை கொடுக்கிறது. இது வர்ணிக்க பட்ட இடங்களுக்கும், ஞான வாதங்களுக்கும் பொருந்தும். … Continue reading விஷ்ணுபுரம் – புத்தகம்

கோபல்ல கிராமம் – புத்தகம்

கிரா அவர்களின் செய்தியை கேட்டு ரொம்ப நாளாய் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகத்தை எடுத்தேன். புத்தகம் துவங்கியதும் முடிந்ததும் தெரியவில்லை. புத்தகத்தில் உரையாடல் கிட்டத்தட்ட இல்லாமல் கதையாகவே சொல்கிறார் என்பதை முடிக்கும் தருவாயில் தான் உணர்ந்தேன். இது தான் கதை சொல்லலின் அழகோ! கரிசல் காடு கிரமாகிறது. அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது தனித்துவம் இருக்கிறது. அல்லது உருவாக்கி கொள்கிறார்கள். அப்படி இருந்ததால் தான் கிராமங்கள் உருவாக்க முடிந்து இருக்கிறது. முட்காட்டை பயிரிட செய்ய எடுக்கும் … Continue reading கோபல்ல கிராமம் – புத்தகம்

Art of Reading!

As age goes by, reading starts to change dimensions. As a young reader, fiction was fascinating. I remember reading rajesh kumar, ramani chandran, patukottai prabar in my 8th to 12th Std. Books were of interesting stories, detective/mystery and all about what happens next. I think now that, getting used to such books at young age, … Continue reading Art of Reading!

ஏற்காடு, தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

இரண்டு நாட்கள் ஏற்காடு பயணம். முதல் நாள், இரண்டு ஆண்டுக்கு முன் சென்ற பயணத்தில் பார்த்த அதே இடங்கள் சென்றோம் (லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சேவராயன் கோவில்). கண்களில் பதிந்த காட்சிகள். பார்க்கும் முன் கண்முன்னே வந்தன. இங்கு ஏன் தேயிலை பயிரிடப்படுவதில்லை என்று தெரியவில்லை, அதிகமாக காபி தோட்டங்களை பார்க்க முடிகிறது. அதுவும் இப்பொது பூக்கும் பருவம். முதல் முறை காபி பூக்களை பாக்கிறோம். செடி நெடுக பூத்திருந்தது. மல்லி போன்ற தோற்றம், மல்லிக்கு … Continue reading ஏற்காடு, தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்