விஷ்ணுபுரம் – புத்தகம்

ஜெமோவின் இந்த புத்தகம் படிக்க இது சரியான நேரம் என்று தோன்றியது. இதன் அனுபவம் இந்த சூழ்நிலையில் இன்று உள்ள என் அனுபவத்தை இன்னொன்றாக மாற்றும் என்ற நம்பிக்கையோடு. கடந்து, தெளிந்து செல்ல!.

கதையில் இருக்கும் பிரமாண்டம் உள்ளே செல்ல சிறிது தடையாக உள்ளது. அந்த வர்ணனை கற்பனைக்கு எட்டாதாக கூட உள்ளது. இருந்த போதும் ஒரு பிம்பம் கொடுத்து நம்மில் அந்த பிரமாண்ட உணர்வை கொடுக்கிறது. இது வர்ணிக்க பட்ட இடங்களுக்கும், ஞான வாதங்களுக்கும் பொருந்தும். அதன் கரு முழுமையாக புரியாத போதும், அது எங்கோ நம்மை கொண்டு செல்கிறது என்று மட்டும் புரிகிறது.

ஸ்ரீபாதம் (பகுதி 1/3) முடிவடைந்தது. விஷ்ணுபுரத்தில் ஒவ்வொருவரும் எதையோ தேடுகிறார்கள், ஏங்குகிறார்கள். அல்லது தேடுபவர்கள்தாம் கதையின் கருவாக இருக்கிறார்கள். ஞானமும் போகமும் மாறி மாறி அலைக்கழிக்கிறது. சமநிலை என்பதே இல்லையோ என்று தோன்றும் அளவுக்கு. நாம் இன்று மிகையாக பண்படுத்த பட்டு விட்டோமோ என்று கூட தோன்றுகிறது.

கதை மெதுவாக உள்ளே இழுக்கிறது. புரியாத பல சொற்கள் இருந்தும், கற்பனையில் விஷ்ணுபுரத்தை முழுதாக எழுப்பி கொள்ள முடியவில்லை என்றாலும், போகமும் ஞானமும் நம்மை புத்தி பேதலிக்க வைத்தாலும் ஏதோ ஒன்று பக்கங்களை முன்னகர்த்தி செல்கின்றது. கதை மாந்தர்களின் தேடல் தான் அது என்று தோன்றுகிறது. தனிமையும் வெறுமையும் தவிர பதில் ஏதும் இல்லை என்பது புரிந்து விட்ட போதிலும்.

Vishnupuram (Tamil) by [ஜெயமோகன், Jeyamohan]

ஸ்ரீபாதம் துக்கத்தில் இருந்து கேள்வியை எழுப்பி, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல கௌஸ்துபம் (பகுதி 2/3) துவங்கியது. கேள்வியாய், விடையாய், கேள்வியாய் முன் நகர்ந்து செல்ல. தத்துவத்தின் கற்றுகுட்டியாய் இருக்கும் போதும், இங்கு எழுப்பப்படும் கேள்விகளும் விளக்கங்களும் மேலோட்டமாக புரிவது போல் உள்ளது. ஆத்மார்த்தமாக உணர இன்னும் அனுபவம் தேவை போல் தோன்றுகிறது.

வரலாறு பலசமயங்களில் கொடூரமாக இருந்துள்ளது என்பதை நினைக்க வைக்கிறது. நாம் இன்று இங்கு இருக்க கடமைப்பட்டுளோம் என்ற உணர்வை கொடுக்கிறது, யாருக்கு என்பது வேறு விஷயம். இரண்டாம் பகுதி முழுக்க ஞானசபை விவாதங்கள். சிறிது மட்டுமே புரிய, பலது முழுதாக உணராமல் படித்து சென்றேன்.ஆனால் கேட்க படும் கேள்விகளும், பல பதில்களும் ஆழமாக யோசிக்க வைக்கிறது. ஞானம் தன்னலவில் உணரபடும் காலமும் தர்க்க நிலைக்கும் ஏற்ப மாறி கொண்டுதான் இருக்கும் போல.அதுவும் தர்க்க புத்தி மேலோங்கி இருக்கும் போது, கனவு/கற்பனை இன்மை ஞான விவாதத்தை கூட ஒரு புள்ளிக்கு மேல் கடந்து பார்க்க தடையாய் இருக்கிறது. தேடலின் முடிவு தனிமையும் வெறுமையும் மட்டுமே என்று அறியும் போது கூட, தேடலின் அகங்காரத்தை நிரப்பவாவது முன் நகர வேண்டும். விஷ்ணுபுர வாசிகளை போலே!

மூன்றாம் பகுதியான மணிமுடி பிரளயத்தில் முடிகிறது. வெறுமையை உணர்த்திய படி. விஷ்ணுபுரம் மறுபடியும் முழுமையாக படிக்க வேண்டிய காவியம், இன்னொருத்தியாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s