கிரா அவர்களின் செய்தியை கேட்டு ரொம்ப நாளாய் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகத்தை எடுத்தேன். புத்தகம் துவங்கியதும் முடிந்ததும் தெரியவில்லை. புத்தகத்தில் உரையாடல் கிட்டத்தட்ட இல்லாமல் கதையாகவே சொல்கிறார் என்பதை முடிக்கும் தருவாயில் தான் உணர்ந்தேன். இது தான் கதை சொல்லலின் அழகோ!
கரிசல் காடு கிரமாகிறது. அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது தனித்துவம் இருக்கிறது. அல்லது உருவாக்கி கொள்கிறார்கள். அப்படி இருந்ததால் தான் கிராமங்கள் உருவாக்க முடிந்து இருக்கிறது. முட்காட்டை பயிரிட செய்ய எடுக்கும் முயற்சிகள், தீவட்டி கும்பலை ஓட வைக்க செய்யும் தந்திரங்கள், ஒவ்வொருவரின் தனித்துவ செயல்பாடுகள் என்று புத்தகம் முழுக்க கரிசல் மண்ணின் மணம் நம்மை ஈர்க்கிறது. இப்படியெல்லாம் இருந்த மக்களும் கிராமங்களும் ஏன் இன்று போல் ஆனது என்ற கேள்வி வந்து கொண்டேதான் இருக்கிறது.

புத்தகம் முழுவதும் மண்ணின் அனுபவமும், நகைச்சுவையும், புத்திசாலித்தனமும் வந்து கொண்டே இருக்கிறது. அக்கையாவும், கோயிந்த நாயக்கரும், பூட்டியும், கழுவேற்றபட்ட கள்வனும் மனதில் நிற்கிறார்கள். ஊரடங்கு முடிந்த உடன் இதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் படிக்க வேண்டும்.
இந்த இரண்டாம் அலையின் தீவிரத்தை, நமக்கு நெருக்கமானவர்கள் படும் கஷ்டத்தை, அதற்கு எதுவும் செய்ய முடியாத இயலாமையை கடந்து செல்ல புத்தகங்கள் தவிர வேறேதும் இல்லை என்று தோன்றுகிறது.
Super Review. RIP Kee.Ra
LikeLike