தென் இந்திய வரலாறு (தொகுதி-1) – புத்தகம்

டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தென் இந்திய வரலாறு புத்தகம் 1958-ல் வெளியானது. தெற்கின் வரலாற்றை சுருக்கமாக அறிய உதவும் நூல். இரண்டு பாகங்கள் கொண்டது. கி. மு முதல் கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை இந்நூலில் (தொகுதி 1) பேசப்பட்டுள்ளது.

துவங்கும் போதே ஆசிரியர், தெற்கின் வரலாறு சரிவர எழுதப்படவில்லை என்ற வருத்தத்தை பதிவு செய்கிறார். இந்த முதல் பகுதியை படிக்கும் போது அதேதான் தோன்றுகிறது. இந்த வரலாறு நான் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு அறியும் போது, சுற்றியுள்ள முக்கால் வாசிக்கும் மேற்பட்டோர் இன்னும் அறியப்படாத போது-அறிய முற்படாத போது இன்றும் அது உண்மைதான்.

தென் இந்தியாவின் நிலஅமைப்பில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சிமுறை, சமுதாயம், மக்கள், கலை எவ்வாறு வளர்ந்து அல்லது மாறி வந்தது என்று கூறுகிறது. ஆசிரியர் பல நூல்கள் புராணங்களை ஒப்பிட்டு கூறியும், கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளை சுட்டிக்காட்டியும் அவருடைய ஆராய்ச்சியை வைத்தும் விளக்குகிறார். இன்றைய ஆந்திரா/தெலுங்கானா, மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு மாநிலங்களை ஆண்ட மன்னர்களை முறையே வரிசை படுத்தி உள்ளார். கி.மு 200-ல் சாதாவாகனர் தொடங்கி கி.பி 13ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி வரை மன்னர்களின் ஆட்சி முறை, ஒவ்வொரு ஆட்சியிலும் சமுதாயத்தின் மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை முறை, மதங்களின் வளர்ச்சி/வீழ்ச்சி, கலை இலக்கிய பங்களிப்பு, வணிகம் என்ன அனைத்தையும் தெளிவுற ஆராய்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 51OeNYw636L._SX305_BO1,204,203,200_.jpg

கி.பி 7ஆம் நூற்றண்டில் தொடங்கிய இந்து சமய புரட்சி, அதன் மூலம் உருவான உட்பிரிவினைகள், பக்தி இலக்கியங்கள், அதன் அறிவியல் சிந்தனைகள் – இவையெல்லாம் சமயத்தில் இருந்து தள்ளி நின்று சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள துணையாய் இருந்தது. சமயத்தில் உள்சென்று கற்க பல உள்ளன என்பதையும் தெளிவு படுத்துகிறது. அதனூடே, இந்திய தத்துவத்தை அறிய ஆரம்பிக்க ஒரு நல்ல அறிமுகமாக உணர்ந்தேன். தனிப்பட்ட சிறு சிறு சமூகமா இருந்து, சிற்றரசு பேரரசு, சமய புரட்சி என கடந்து வரும் போது மக்களும் சமூகமும் மாறுதல் கொள்கிறது. எவ்வாறு என்பதை மேலோட்டமாக ஆசிரியர் கூறியுள்ளார். இதனை விரிவாக அறிய இதே ஆசிரியரின் “தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்” உதவும் என்று நினைக்கிறேன, படிக்க வேண்டும்.

தென் இந்தியர்கள் நெடுங்காலமாக வணிகத்தின் பொருட்டு உள்நாட்டில் மட்டுமல்லாமல் கடல் கடந்தும் சென்றுள்ளனர். மத்திய கடற்கரை (Mediterranean) மார்கமாக பல நாடுகளில் இருந்து இங்கு வந்து வணிகம் செய்தும் உள்ளனர். இதற்கு சோழர்கள் காலத்தில் சம்பா தீவு (Sumba Island) வரை வணிகம் செய்ததும், கி.மு 15ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டுடன் நடந்த வணிகத்தின் அடையாளங்கள் பல இடங்களிலும் நூல்களிலும் கண்டறிய பட்டுள்ளன.

கட்டிடக்கலை: கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்தே சமண பௌத்த குகைகள் நிறுவப்பட்டுள்ளன. குகைகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை பரவலாக அமைக்கப்பட்டுள்ளது. அஜந்தா, எல்லோரா, சித்தன்ன வாசல் ஓவியங்கள் என பல சான்றுகள் உண்டு. தமிழகத்தில் பல்லவர்கள் தொடங்கிய கற்கோவில்கள், பிற்கால சோழர்களால் மேலும் வளர்ச்சியை அடைந்தது. தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழ புரமுமே போதும் இதைச் சொல்ல.

இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது மேலும் வரலாற்றை படிக்க சிந்திக்க தூண்டிய சிறந்த புத்தகம் இது.

மேலும்… (அடுத்த பகுதி முடித்த பின் !)