தமிழில் எழுதி வருடங்கள் பல ஆகின்றன. தமிழ் புத்தகத்தை பற்றி தமிழில் எழுதினால் தானே நியாயம்!

சில சமயங்களில் (மட்டும் தான்) நாம் இருக்கும் மனநிலைக்கு ஏற்ப புத்தகம் அமையும். அப்படி இந்த புத்தகம் அமைந்து மட்டுமின்றி, எண்ண ஓட்டங்களை சீர் படுத்த மற்றும தெளிவு படுத்த உதவியுள்ளது. ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் சில வருடங்கள் முன்பு படித்துள்ளேன். இது இரண்டாவது புத்தகம்.
இப்புத்தகம் தன்னறத்தை முன்நிறுத்தி இணையதளத்தில் நடந்த உரையாடல்கள். வாசகர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் மற்றும் சில தன்னறம் பற்றிய அவருடைய கட்டுரைகள். தற்கால சூழ்நிலையில் பலருக்கும் வரும் அறம் பற்றிய கேள்விகளுக்கு மிக தெளிவாக அவருடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சொல்லியுள்ளார்.
நான்கு வேடங்கள், விதி சமைப்பவர்கள் கட்டுரைகளில் முறையில் மரபும் அனுபவமும் கூறுவதை எளிமையாக எடுத்துரைக்கிறார். மற்றனைத்தும் பூர்த்தியான பிறகும் அறிவின்/ஆத்மாவின் தேடல் இருந்து கொண்டுயிருப்பது வீடுபேறு நோக்கிச்செல்லும் படிகள் என உணரவைக்கும் ஆழமான புத்தகம் இது. இதை புத்தக வடிவில் கொண்டு வந்த தன்னறம் பதிப்பகத்து நன்றி !